ஊத்தான் மெலிந்தாங் படகுத்துறையில் தவறி விழுந்த 7 வயது சிறுவன், சடலமாக கண்டெடுக்கப்பட்டான்

பாகன் டத்தோ, டிசம்பர் 1 :

ஊத்தான் மெலிந்தாங்கில் உள்ள மீன்பிடி தளம் அருகே உள்ள படகுத்துறையில், நேற்றிரவு தவறி விழுந்ததாக நம்பப்படும் ரோஹிங்கியா சிறுவன், நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டான்.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) பேராக் மாநில செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாதிக்கப்பட்ட ஏழு வயது சிறுவன் சம்பந்தப்பட்ட சம்பவம் பற்றிய தகவல் காலை 7.08 மணிக்கு கிடைத்தது.

அதனைத்தொடர்ந்து ஊத்தான் மெலிந்தாங்கின் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உறுப்பினர்கள் குழு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தது என்றார்.

அதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், சிறுவன் விழுந்ததாக கூறப்பட்ட இடத்திலிருந்து 600 மீட்டர் தொலைவில் , சிறுவனின் உடல் மிதந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here