பெர்லிஸின் முன்னாள் மந்திரி பெசார் அப்துல் ஹமீட் பவன்தே காலமானார்

கங்கார், டிசம்பர் 1 :

பெர்லிஸின் நான்காவது முன்னாள் மந்திரி பெசார், டான்ஸ்ரீ டாக்டர் அப்துல் ஹமிட் பவன்தே, தனது 78 ஆவது வயதில் இன்று காலமானார்.

இன்று பிற்பகல் 3.15 மணியளவில் அவரது தந்தை இறந்துவிட்டதாக அவரது மகன் நடஸ்யா பவன்தே ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள ஒரு பதிவின் மூலம் பகிர்ந்து கொண்டார்.

பெர்லிஸ் மாநில பிரிபூமி பெர்சாத்து கட்சியின் மாநிலத் தலைமைக் குழுவின் (BPN) தலைவரும் கோலாப் பெர்லிஸ் மாநில சட்டமன்ற உறுப்பினருமான அபு பக்கர் ஹம்சா, அப்துல் ஹமீட் பவன்தே இறந்ததை உறுதிப்படுத்தினார்.

எனினும் உயிரிழந்தவரின் மரணத்திற்கான காரணம் என்ன என்று அறியப்படவில்லை.

மறைந்த டான்ஸ்ரீ டாக்டர் அப்துல் ஹமீட் பவன்தே, பெர்லிஸின் Parti Pribumi Bersatu Malaysia (பெர்சாத்து) இல் சேருவதற்கு முன்பு, பெர்லிஸ் அம்னோவை வழிநடத்துவது உட்பட அரசியலில் மிகவும் தீவிரமாக இருந்தார்.

இவர் 1986 முதல் 1995 வரை பெர்லிஸ் மாநில முதலமைச்சராக பணியாற்றினார், அத்தோடு அவர் 1982 முதல் 1986 வரை ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார், மேலும் 1999 -2003 வரை கங்காரின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.

அவர் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகராக நியமிக்கப்படுவதற்காக கங்காரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார், மேலும் அவர் பிரதிநிதிகள் சபையின் துணை சபாநாயகராகவும் இருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

நாளை வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு ஆராவ் அரசு மசூதியில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here