மலேசியாவின் பல பகுதிகளில் நாளை வரை தொடர் மழை எச்சரிக்கை- மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர், டிசம்பர் 2 :

தீபகற்ப மலேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் நாளை வரை தொடர்ந்து மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிளாந்தான் மற்றும் திரெங்கானு, பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக் (உலு பேராக்) மற்றும் பகாங் (ஜெரான்துட், குவாந்தான் மற்றும் பெக்கான்) ஆகிய இடங்களில் தொடர் மழை பெய்யும் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வு கூறப்பட்டுள்ளது

மேலும் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, மலாக்கா, பெர்லிஸ், பினாங்கு, பேராக், கெடா, நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் சபா மற்றும் சரவாக்கில் உள்ள பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றிரவைப் பொறுத்தவரை, சரவாக் (கூச்சிங், செரியான் மற்றும் சமரஹான்) மற்றும் சபா (தாவாவ்) ஆகிய பகுதிகளில் உள்ள பல பகுதிகளைத் தவிர, சண்டக்கான் மற்றும் குடாட் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை, கிளாந்தான், திரெங்கானு, பகாங், பெர்லிஸ், கெடா, பினாங்கு, பேராக், ஜோகூர் மற்றும் சபாவில் (மேற்கு கடற்கரை, சண்டகான் மற்றும் குடாட் ) பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, மேலாக்கா, பெர்லிஸ், பினாங்கு, பேராக், கெடா, நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் சபா மற்றும் சரவாக்கில் உள்ள பல பகுதிகளிலும் நாளை மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 4), பெர்லிஸ், கிளாந்தான், திரெங்கானு, கெடா, பினாங்கு, சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா, நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜோகூர் மற்றும் சபாவில் உள்ள பல பகுதிகளில் காலையில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here