குபாங்கிலுள்ள கம்போங் இபோய் உட்பட ஏழு கிராமங்களில் திடீர் வெள்ளம் ; 50 வீடுகள் பாதிப்பு

பாலிங், டிசம்பர் 2:

நேற்று மாலை சுமார் 6 மணியளவில் குபாங்கிலுள்ள கம்போங் இபோய் உட்பட ஏழு கிராமங்களில் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன, இதில் சுமார் 50 வீடுகள் பாதிக்கப்பட்டடன. ஆனாலும் இதுவரை எந்த நிவாரண மையமும் திறக்கப்படவில்லை என்று பாலிங் மாவட்ட குடிமைத் தற்காப்புப் படை , அதிகாரி லெப்டினன்ட் (பிஏ) முகமது ஃபைசோல் அப்துல் அஜீஸ் தெரிவித்தார்.

இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையின் பின்னர் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாகவும், இதனால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளுக்குள் ஆற்று நீர் பெருக்கெடுத்து ஓடியதாகவும் கூறினார்.

வெள்ள நீர் வடிந்தாலும், ஆற்றின் நீர் மட்டத்தை இன்னும் உன்னிப்பாகக் கண்காணித்து அவ்வப்போது சரிபார்க்க வேண்டும் என்று முகமட் ஃபைசோல் நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இதற்கிடையில், கம்போங் இபோய் கிராமத் தலைவர் நோர் முகமட் சே ஹுசைனை தொடர்பு கொண்டபோது, ​​” எமது கிராமம் வெள்ளத்தில் மூழ்கியிருப்பது 11வது முறை என்றும, இதற்கு முடிவே இல்லையா “என்றும் வருத்தம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here