அடுக்குமாடி குடியிருப்பில் மரம் விழுந்து ஐந்து கார்கள் சேதம்

டாமன்சாராவில் உள்ள பெலாங்கி அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மரம் விழுந்ததில் ஐந்து கார்கள் சேதமடைந்தன. மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜேபிபிஎம்) சிலாங்கூர் இயக்குநர் நோராஸாம் காமிஸ், தனக்கு காலை 8.35 மணிக்கு அழைப்பு வந்ததாகவும், ஆறு நிமிடங்களுக்குப் பிறகு அந்த இடத்திற்கு சென்றதாக கூறினார்.

அவர் கூறுகையில், விழுந்த மரம் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடத்தில் ஐந்து வாகனங்கள் மீது மோதியது.Perodua Bezza, 2 Perodua Axia, Proton Wira Aeroback  மற்றும் Proton Saga ஆகியவை சேதமடைந்த வாகனங்களாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here