அம்பாங் நிலச்சரிவு: நிலத்தடி குழாயில் ஏற்பட்ட கசிவால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது

கோலாலம்பூர், டிசம்பர் 3 :

அம்பாங், தாமான் மெகா ஜெயாவில் உள்ள குடியிருப்பு பகுதியில் நேற்று ஏற்பட்ட 30 மீட்டர் உயர நிலச்சரிவு, நிலத்தடி நீர் குழாய் கசிவால் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், சம்பவம் குறித்து நேற்று நண்பகல் 2.48 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், பாண்டான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் இருந்து ஏழு தீயணைப்பு வீரர்களை அனுப்பியதாகவும், அவர்கள் 12 நிமிடங்களுக்குப் பிறகு சம்பவ இடத்தை அடைந்ததாகவும் கூறினார்.

“நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து 20 மீ தொலைவில் அருகிலுள்ள வீடு இருந்தது என்றும் இதன் போது வீடு கட்டமைப்புகள் சம்பந்தப்பட்ட பாதிப்புகளோ அல்லது சேதமோ ஏற்படவில்லை ” என்று அவர் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அவர்கள் இன்னும் நிலைமையை கண்காணித்து வருவதாகவும், Indah Water Konsortium (IWK)  பராமரிப்பு பணிகளை மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here