எனக்கு வழங்குவதாக கூறிய அமைச்சர் பதவியை நிராகரித்தேன் என்கிறார் கோபிந்த் சிங்

அன்வார் இப்ராஹிமின் அமைச்சரவையில் இடம்பெறும் வாய்ப்பை தான் நிராகரித்ததாக டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர்  கோபிந்த் சிங் தியோ கூறுகிறார்.

டிஏபி பிரதிநிதி, பிரதமர் தனக்கு அமைச்சரவையில் ஒரு பதவியை வழங்குவதாகக் கூறினார். ஆனால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தனது பங்கில் கவனம் செலுத்தவிருப்பதால் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாகக் கூறினார்.

என்னால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்  என்ற முறையில் எனது பங்கில் கவனம் செலுத்தி என்னால் முடிந்த அனைத்து வழிகளிலும் அரசாங்கத்திற்கு உதவுவேன் என்றும் நான் அவரிடம் தெரிவித்தேன் என்று அவர் இன்று முகநூலில் தெரிவித்தார்.

நேற்று, பிரதமர் அன்வார் இப்ராகிம் தனது ஒற்றுமை அரசாங்கத்திற்கு 28 பேர் கொண்ட அமைச்சரவையை நியமித்தார். இந்த வரிசையில், கோபிந்தின் முந்தைய அமைச்சர் பதவி பிகேஆர் தகவல் தலைவர் ஃபஹ்மி ஃபட்சில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here