நேற்றிரவு பெய்த கனமழையைத் தொடர்ந்து கிள்ளான், ஷா ஆலாமில் 25 பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

ஷா ஆலாம், டிசம்பர் 3 :

இரவு 8 மணியளவில் பெய்த கனமழையைத் தொடர்ந்து கிள்ளான் மற்றும் ஷா ஆலாமில் மொத்தம் 25 பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் சிலாங்கூர் இயக்குனர் நோராஸாம் காமிஸ் கூறுகையில், இதுவரை எந்த மீட்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, இருப்பினும் அனைத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களா ம் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

“பள்ளங்கள் மற்றும் வாய்க்கால்களின் நீர்மட்டம் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது, இருப்பினும் குடியிருப்புவாசிகளின் வீடுகளுக்குள் தண்ணீர் வரவில்லை.

மேலும், தண்ணீர் நன்றாக வழிந்தோடுவதாகவும், அவ்வப்போது தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக தாமான் மஸ்னாவில்; தாமான் மெளவ்விஸ்; கம்போங் ஜாவா ; சுங்கை ஊடாங் ; ஜொஹான் செத்தியா; பண்டார் கிள்ளான்; தாமான் செந்தோசா ; பத்து பேலா; கம்போங் தெலோக் மேனகோன்; கம்போங் ஜாலான் கேபுன்; கம்போங் ரந்தாவ் பாஞ்சாங்; தாமான் பிஜாயா ; தாமான் ஸ்ரீ மேனகோன்.

மேலும் கம்போங் குவாந்தான் ; புக்கிட் கூடா; தாமான் ஆலாம் ஷா; தாமான் பாயு பெர்டானா; தெலோங் காடோங் பெசார் ; கம்போங் ஸ்ரீ காம்புட் ; கம்போங் சுங்கை பினாங் ; தெலோங் கோங்கிலுள்ள கம்போங் பேராஜூரிட் மற்றும் கம்போங் நெலயான் ; லோரோங் பெண்டகரான் தாமான் மேவாஹ் பாரு ; தாமான் சுங்கை ஜாத்தி சேர்த்தா தாமான் சி லியுங் என்பன வெள்ளப்பாதிப்பு உள்ளாகின.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here