சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து PN நிதி ஆதரவை பெற்றதா ? ஹடி அவாங் மறுப்பு

சூதாட்ட நிறுவனங்களிடம் இருந்து பெரிக்காத்தான் நேஷனல் நிதியாதரவை பெற வாய்பே இல்லை. சூதாட்ட நிறுவனங்களை மூட பெரிக்காதான் நேஷனல் உத்தரவிட்ட வேளையில்  எப்படி அந்நிறுவனங்களிடமிருந்து நிதி ஆதரவை பெற்றிருக்க முடியுமென பாஸ் கட்சி தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹடி அவாங் கேள்வி எழுப்பினார்.

நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு பின்னர், பெரிகாத்தான் நேஷனல் கிட்டதட்ட ஆட்சி அமைக்கும் நிலை வந்த போது, சூதாட்ட நிறுவனங்களின் பங்குகள் மோசமாக வீழ்ச்சி கண்டன. பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்துக்கு எதிராக சூதாட்ட நிறுவனங்கள் கொண்டிருந்த எதிர்மறையான கண்ணோட்டமே அதற்கு காரணம் என்பதையும் ஹடி அவாங் சுட்டிக் காட்டினார். எனவே, சரியாக சிந்திக்க முடியாதவர்கள் மட்டுமே, சூதாட்ட நிறுவனங்களிடமிருந்து பெரிகாத்தான் நேஷனல் நிதி ஆதரவை பெற்றதாக கூறப்படுவதை நம்புவார்கள் என ஹடி அவாங் குறிப்பிட்டார்.

சரியான ஜனநாயக முறைப்படி, பாக்காதான் ஹரப்பான் ஆட்சி அமைக்கிறது என்ற செய்தி வெளியான பின்னரே, சூதாட்ட நிறுவனங்களின் பங்குகள் மீண்டும் ஏற்றம் கண்டன. அதனால், நாட்டில் சூதாட்ட மையங்களை மூடி வந்த பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்கு சூதாட்ட நிறுவனங்கள் நிதியாதரவு வழங்கியதாக கூறப்படுவது முட்டாள்தனமானது எனவும் ஹடி அவாங் சாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here