கல்வியால் மட்டுமே நம் சமுதாயம் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்பதனை கருத்தில் கொண்டு பகாவ் மாநிலத்தை சேர்ந்த தனது ஆரம்பக் கல்வியை தமிழ்ப்பள்ளியில் ஆரம்பித்து இன்று மருத்துவர் துறையில் விக்னேஸ்வரி சுப்ரமணியம் பட்டம் பெற்றுள்ளார். யுபிஎஸ்ஆர் தேர்வில் 7ஏ, படிவம் 3இல் அனைத்து பாடங்களிலும் ஏ, படிவம் 5இல் 7ஏ,2பி பெற்ற மாணவி விக்னேஸ்வரி சுப்ரமணியம்.
என் பள்ளிப்படிப்பிற்கு நான் பல்கலைக்கழகத்தில் சேர விரும்பியபோது என்னுடைய தேர்வு எம்எஸ்யு (MSU) ஆக இருந்தது. நான் முதலில் ஓராண்டு பவுண்டேஷன் கல்வியை முடித்து மருத்துவர் கல்வியை தொடர்ந்து பட்டம் பெற்றுள்ளேன். என் தந்தை காவல்துறையில் பணியாற்றி வருகிறார்.
நான் மருத்துவராக எனக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தார் மற்றும் சகோதரர், சகோதரிக்கு இவ்வேளையில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நெகிரி செம்பிலான், பகாவ் மாநிலத்தை சேர்ந்த விக்னேஸ்வரி சுப்ரமணியம் தற்பொழுது ஜோகூர் சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் housemanship மேற்கொண்டு வருகிறார்.