கூலிம், டிசம்பர் 7 :
பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் தியோமான் சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று வரும் 15-வது பொதுத் தேர்தலில், ஏனைய கட்சிகளுக்கு வழிவிட்டு, போட்டியிடுவதிலிருந்து விலகியிருக்கும் வேட்பாளர்கள் அதிக வாக்குகள் பெறுவார்களாயின், அவர்களே வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர் என்று தேர்தல் ஆணையத்தின் தலைவர், டான் ஶ்ரீ அப்துல் கானி சாலே தெரிவித்துள்ளார்.
15-வது பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கடந்த நவம்பர் 24-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்த அனைத்து வேட்பாளர்களும் இத்தேர்தலில் போட்டியிட தகுதிப் பெற்றவர்கள் என்று அவர் மேலும் கூறினார்.
இன்று கெடா, கூலிம், சுல்தான் பட்லிஷா இடைநிலைப்பள்ளியில் வாக்களிப்பு செயல்முறையைப் பார்வையிட்ட பின்னர், டான் ஶ்ரீ அப்துல் கானி செய்தியாளர்களிடம் பேசினார்.