மலேசியர்களுக்கு அதிக நிதி சவால்கள் உள்ளன

உலக அளவில்   ஏற்பட்டுள்ள பொருளதார மந்தநிலை மற்றும்  அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில், மக்கள்   எப்போதும் இல்லாத அளவு  நிதி நெருக்கடியில் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.  RinggitPlus Malaysian Financial Literacy Survey (RMFLS) 2022 இன் தரவானது, மக்களின் தற்போதைய நிதிநிலை,  குறைக்கப்பட்ட சேமிப்புகள், பணப்புழக்க பிரச்சனைகள்     குறித்த பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.

தொற்றுநோய் தாக்குதல் பொருளாதார  பேரழிவை ஏற்படுத்தியிருப்பதால்   பல நிதி சவால்கள்      ஏற்பட்டுள்ளன.  இது மக்களுக்கு மட்டுமல்ல, கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறையினர் என            அனைவருக்கும்    பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.   அனைத்து தரப்பு மக்களும் தற்போது கடுமையான நிதி சவால்களை எதிர்கொள்கின்றனர்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 3,144 மலேசியர்களிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்பின் படி  55% மக்கள் ஒவ்வொரு மாதமும் அவர்கள் சம்பாதித்ததை விட  அதிகமாக செலவழிக்க வேண்டியுள்ளது  என்கின்றனர்.

2022 இல் 55%   கடன் அட்டைதாரர்கள் தங்கள்     கடன் அட்டை ரசீதுகளை  முழுமையாக செலுத்தவில்லை என்று  குறிப்பிட்டப்பட்டுள்ளது.   கணக்கெடுப்பின்படி, பதிலளித்தவர்களில் 21 வயதிற்கு மேற்பட்ட    66% பேர், அரசாங்கம் அனுமதித்தால், வருங்கால வைப்பு நிதியை திரும்பப் பெறுவதற்கு   விண்ணப்பிக்க  விரும்புவதாக தெரியவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here