கெடாவில் உள்ள பாடாங் செராய் நாடாளுமன்றத் தொகுதிக்கும், பகாங்கில் உள்ள தியோமன் மாநிலத் தொகுதிக்கும் புதிய பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது. இதில் 160,000க்கும் மேற்பட்டோர் வாக்களிக்கவுள்ளனர்.
தேர்தல் ஆணைய (EC) தகவலின்படி, பாடாங் செராயில் 132,955 வாக்காளர்களும், தியோமனில் 28,108 வாக்காளர்களும் உள்ளனர். பாடாங் செராயில் 46 வாக்குச் சாவடி மையங்களும், தியோமனில் 17 வாக்குச் சாவடிகளும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.
பாடாங் செராயில் பக்காத்தான் ஹரப்பானின் எம் கருப்பையா, மற்றும் தியோமனில் பெரிகாத்தான் நேஷனலின் யூனுஸ் ரம்லி ஆகிய இரு வேட்பாளர்களின் மரணத்தைத் தொடர்ந்து நவம்பர் 19 பொதுத் தேர்தலின் போது இந்த இரண்டு இடங்களுக்கான வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது.









