ஜோகூரிலுள்ள 122 சட்டவிரோத சூதாட்ட மையங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு

ஜோகூர் பாரு, டிசம்பர் 8:

சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சியில் ஒன்றாக, ஜோகூர் காவல்துறை மாநிலம் முழுவதும் உள்ள 122 வளாகங்களுக்கு மின்சாரத்தை துண்டித்துள்ளது.

ஜோகூர் காவல்துறைத் தலைவர், டத்தோ கமாருல் ஜமான் மாமட் கூறுகையில், சம்பந்தப்பட்ட அனைத்து மின் வெட்டுக்களும் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை செயல்படுத்தப்பட்டன என்றும், இதற்கு தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அவர் கூறினார்.

அவரது கூற்றுப்படி, இந்த நடவடிக்கை திறந்த சூதாட்டச் சட்டம் 1953 இன் பிரிவு 21A இன் கீழ் சட்டத்தின் விதிகளுக்கு ஏற்ப, ஜோகூர் காவல்துறையுடன் TNB பணியாளர்களும் இணைந்து மின்சார விநியோகத்தை தடை செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டது.

“குற்றப் புலனாய்வுத் துறையின் ஏற்பாட்டில், மாவட்ட காவல்துறைத் தலைவர் தலைமையில் மேற்கொண்ட இந்த நடவடிக்கையில், மொத்தம் 65 போலீஸ் அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களுடன் 42 TNB ஊழியர்களுடன் மேற்கொள்ளப்பட்டது” என்று அவர் கூறினார்.

ஜனவரி முதல் டிசம்பர் 5, 2022 வரை, ஜோகூர் காவல்துறை அனைத்து வகையான சூதாட்டங்களையும் உள்ளடக்கிய 2,166 சோதனைகளை நடத்தியது மற்றும் 1,099 கைத்தொலைபேசிகள், மூன்று கணினிகள், நான்கு மடிக்கணினிகள் மற்றும் RM835,299 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்ததுடன் 2,802 நபர்களை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here