புத்ராஜெயா பகுதியில் 13.26 மில்லியன் மதிப்புள்ள ஷாபு போதைப் பொருளைக் கைப்பற்றியதோடு ஒரு மாணவர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புத்ராஜெயாவில் வர்த்தக மையம் மற்றும் ஆடம்பர அடுக்ககம் ஆகிய இரண்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், போதைப் பொருள் வினியோக கும்பலின் செயல்கள் முறியடிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமட் தெரிவித்தார்.
வர்த்தக மையத்திற்கு அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த Toyata Vellfire வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 355.75 கிராம் Methamphetamine போதைப் பொருளும் பின்னர் அடுக்ககத்திலிருந்து 23 கிலோ போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அர்ஜூனைடி கூறினார்.