கோத்தா கினாபாலு, டிசம்பர் 10:
சபா மாநில பெர்சாத்து தலைவர்கள் அக்கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு ஏகமனதாக முடிவெடுத்திருப்பதோடு, இனி தாம் சபா மக்கள் கூட்டணி, GRS-இல் இருக்கப் போவதாக அக்கட்சியின் தலைவரும், சபா முதலமைச்சருமான டத்தோ ஶ்ரீ ஹாஜிஜி நோர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், பெர்சாத்துவின் கொள்கையைத் தற்காக்க முடியாதுள்ளதனால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.
சபாவின் நலனைத் தவிர்த்து, ஒற்றுமை அரசாங்கத்தை உருவாக்க மேன்மை தங்கிய பேரரசரின் அறிவுரையைக் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக அவர் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.









