ஜிமெயில் செயலிழந்ததால் 77% பயனர்கள் பாதிக்கப்பட்டனர்

கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் நேற்று  சுமார்  இரண்டு மணிநேரம் செயலிழந்ததாகத் தெரியவந்துள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள பல 77%   பயனர்களைப் பாதித்தது.

ஜிமெயிலின் நிலை குறித்து இதுவரை கூகுள் நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இருப்பினும், இரவு 11.30 மணியளவில் சேவை மீண்டும்  தொடங்கியது.  பல ஆயிரக்கணக்கான பயனர்களுக்கு ஜிமெயில் செயலிழந்துள்ளதாகவும், அவர்களின் புகார்களை தெரிவித்ததாகவும் இங்கிலாந்தில் உள்ள சன் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.

77% பயனர்கள் மின்னஞ்சல் சிக்கல்களை எதிர்கொள்வதாகவும், 1.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் டெலிவரி செய்யப்படாத மின்னஞ்சல்கள் மற்றும் பதிலளிக்காத ஜிமெயில் செயலியைப் பற்றி புகார் செய்வதாகவும் டவுன்டெக்டர் இணையதளம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து செய்திகளும் அடுத்த சில மணிநேரங்களில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று நிறுவனம் மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here