ஈப்போ, டிசம்பர் 11 :
நேற்று சனிக்கிழமை (டிச. 10) இரவு நடந்த வாகன விபத்தில் திருமணமான தம்பதியர், மற்றும் அவர்களின் ஒரு பிள்ளை ஆகியோர் உயிரிழந்தனர், மேலும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்தனர்.
விபத்து குறித்து நேற்றிரவு 11.13 மணியளவில் பேரிடர் அழைப்பு விடுக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சித்தியாவானில் உள்ள தெங்கு பெர்மைசூரி பைனுன் பாலத்தில் இரண்டு கார்கள் விபத்தில் சிக்கியதாகவும், மற்ற காரின் பெண் ஓட்டுநருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும், அவரது கார் தீப்பிடித்ததாகவும் அவர் கூறினார்.
விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.