வனவிலங்கு மற்றும் தேசிய பூங்கா துறை (Perhilitan) திங்கள்கிழமை (டிசம்பர் 12) நடத்திய கண்காணிப்பின் போது, ஹுலு சிலாங்கூர் செரண்டா ( Hulu Selangor’s Serendah Lake ) ஏரியில் முதலைகளின் தடயங்கள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை பிற்பகல் 1.40 மணி முதல் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஏரியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் ஊர்வன இருந்ததற்கான தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் சிலாங்கூர் பெர்ஹிலிட்டன் (Selangor Perhilitan ) இயக்குநர் Dennis Ten Choon Yung தெரிவித்தார்.
விசாரணைகளின் முடிவில் முதலைகளின் எந்த தடயத்தையும் கண்டுபிடிக்கவில்லை என தெரிவித்தார். முன்னதாக திங்கட்கிழமை, முதலை என்று கூறப்படும் ஒரு விலங்கின் வீடியோ வைரலாவதற்கு முன்பு MyHuluSelangor முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டது.
அந்த இடுகையின் படி ஊர்வன தண்ணீருக்கு அருகிலுள்ள ஒரு கிளையில் இருந்ததாகவும், அப்பகுதியில் உள்ள மீனவர்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தியது. இந்த வகை முதலை ‘ஜெஜுலாங்’ என்று அழைக்கப்படுகிறது, இது மக்களை சாப்பிடாது என்று நூர் ஹனியாஜ் ஜமீல் கூறினார்.
இந்த வகை முதலைகள் காட்டுத்தனமானவை அல்ல, மீன்களை மட்டுமே உண்கின்றன. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிலைமையை கண்காணித்து வருவதாக தெரிவித்தார். இருப்பினும் ஏரிக்கு வருபவர்கள் மீன்பிடிக்கும்போது கவனமாக இருக்குமாறு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அறிவுறுத்துகிறது.