அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

மலேசிய  வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி  La Nina and negative Indian Ocean Dipole (IOD) phenomena  காரணமாக  அடுத்த மூன்று நாட்களுக்கு கடுமையான மழை    மற்றும் வெள்ள பாதிப்புகள்  ஏற்படும் என தெரியவந்துள்ளது.

தேசிய அண்டார்டிகா ஆராய்ச்சி மையத்தின் வானிலை நிபுணர் பேராசிரியர் Dr Azizan Abu Samah     கூறும்போது,  பருவமழை தென் சீனக் கடலில் பலத்த காற்றை உருவாக்கியது மட்டுமல்லாமல்,  La Nina and negative Indian Ocean Dipole (IOD) phenomena  நிகழ்வுகளையும் உருவாக்கியுள்ளது. இதன் விளைவாக   அதிகப்படியான மழை மற்றும்  வெள்ள பாதிப்புகள்  ஏற்படும்  என்றார்.

கனமழையானது  அடுத்த  மூன்று நாட்களுக்குள் பெரும் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்.  தொடர் மழையின் காரணமாக  ஆறுகளில் அபாயகரமான நீர்மட்டம் உயரும் என்றும், கனமழை தொடர்ந்தால், ஆறுகள் நிரம்பி வழிந்து பல மாநிலங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

கிளந்தான், தெரெங்கானு, பகாங் மற்றும் பேராக் ஆகிய மாநிலங்களில் பெரும் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று அவர் கூறினார்.  வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழையின் அளவு  கிழக்கு மலேசியாவில்     அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா),  the South-Eastern Asia-Oceania Flash Flood Guidance System (SAOFFGS)  மற்றும் DID வெள்ள முன்னறிவிப்பு மாதிரிகள் ஆகியவற்றின் வானிலை முன்னறிவிப்பு அறிக்கைகளின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த மாநிலங்களில் பல இடங்களில் கனமழை அல்லது குறிப்பிடத்தக்க இடியுடன் கூடிய மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here