பெட்ரோலிய எரிவாயுக் கலன் வெடித்ததில் காயமடைந்த பெண், தற்போது கோமா நிலையில் உள்ளார்

வீட்டில் இருந்த சமையல் எரிவாயுக் கலன் திடீரென வெடித்ததில், உடலில் 70 விழுக்காடு தீக்காயங்களுக்கு உள்ளான 26 வயது பெண் தற்போது கோமா நிலையில் உள்ளார்.

இச்சம்பவம் செவ்வாயன்று இங்குள்ள தாமான் சேனா பெர்மாயில் உள்ள ஒரு வீட்டில் நடந்தபோது, பாதிக்கப்பட்ட சித்தி ஹஜர் ஹனிஸ் முஹமட் காலை உணவை சமைத்துக் கொண்டிருந்தார்.

இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் இளைய சகோதரர் முஹமட் அசிப் முஹமட், தனது சகோதரி தொலைத்தொடர்பு நிறுவனத்தில் டிராஃப்டராக பணிபுரிந்ததால், வீட்டில் இருந்தே வேலை செய்ய அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் வீட்டில் காலை உணவை தயார் செய்து கொண்டிருந்தபோது, சமையலறையில் எரிவாயுக் காலன் வெடித்தது.

வெடிப்பு நிகழ்ந்தபோது தானும் மனைவியும் அவர்களது இரட்டை மாடி வீட்டின் மேல் தளத்தில் தூங்கிக் கொண்டிருந்ததாக முஹமட் அசிப் கூறினார்.

வெடிப்பின் அதிர்வுகளை உணர்ந்தபோது அவர் முதலில் இது நிலநடுக்கம் என்று நினைத்தார், ஆனால் அவரது சகோதரி உதவிக்காக கத்தியபோதுதான், ​​ஏதோ சரியாக இல்லை என்று அவருக்குத் தெரியும்.

அவர்கள் கீழே ஓடிவந்தபோது, அறையில் அனைத்து தளபாடங்களும் தூக்கி எறியப்பட்டிருந்தன.

“ஒரு திரைப்படத்தின் வெடிப்பு காட்சியியை பார்ப்பது போல உணர்ந்தேன்,” என்று அவர் கூறினார்.

கணவர் தீயை அணைத்தபோது, மைத்துனியை மற்றொரு அறைக்கு கொண்டு சென்றதாகவும், பக்கத்து வீட்டுக்காரர் தீயணைப்பு வீரர்களை அழைத்ததாகவும் மார்சிதா கூறினார்.

பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர், சாடோன் மொக்தார் கூறுகையில், சமையல் எரிவாயு கசிவுதான் வெடிப்புக்குக் காரணம் என்பதை உறுதிப்படுத்தினார். சம்பவத்திற்கு முந்தைய இரவில் இருந்தே இந்தக் கசிவு படிப்படியாக பரவியிருக்கலாம்,” என்று அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டுள்ள பெண் அடுத்த மாதம் திருமணம் செய்துகொள்ளவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here