ஆறுநாட்டு வேளாளர் குடும்ப விழா

நாம் பிறந்த ஊர்,  நமது சொந்தங்களை சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியான தருணங்களாகும். அந்த வகையில்  ஆறுநாட்டு வேளாளர் குடும்ப விழா அண்மையில் கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் விமரிசையாக நடந்தேறியது.

1991, 2019 என இருமுறை நடைபெற்ற இந்த குடும்ப இந்தாண்டு 3ஆவது ஆண்டாக நடைபெற்றது.  இந்த குடும்ப விழாவில் 500 மேற்பட்ட சொந்த பந்தங்கள் கலந்து விழாவினை சிறப்பித்தனர்.

ஆலயத்தலைவரும் ஆறுநாட்டு வேளாளர் சொந்தங்களின் உறுப்பினருமான சங்கரத்னா சித.ஆனந்தகிருஷ்ணன்  கடந்த நூற்றாண்டில் வியாபாரத்திற்கு மலாயா வந்த ஆறுநாட்டு வேளாளர்  குடும்ப உறுப்பினர்கள் உலகின் பல நாடுகள் வசித்து வருகின்றனர். பல நாடுகளில் வசித்தாலும் சொந்தங்கள் என்பது மிகவும் முக்கியம் என்பதனை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும் என்ற நோக்கில் இந்த குடும்ப விழாவிற்கு ஏற்பாடு செய்தோம்.

ஆறுநாட்டு வேளாளர் சங்கத்தின் தலைவர் டத்தோ மனோகரனின் பேராதவில் இந்த குடும்ப விழா சிறப்பாக நடைபெற்றதோடு குடும்ப உறுப்பினர்கள் கோத்திர பொங்கல் வைத்து விழாவிற்கு மேலும் மெருக்கேற்றினர்.  பாலகிருஷ்ணன் (ஷெல் பாலா)வின் உரை நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.

நிகழ்வில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து 10 குடும்ப உறுப்பினர்கள், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஆறுநாட்டு வேளாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் சொந்த பந்தங்களுடன் உறவாடி மகிழ்ந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here