இனி பெட்ரோலுக்காக வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை ..! இலங்கையில் அறிமுகமாகியது மின்சார மோட்டார் சைக்கிள்

இந்தியாவின் மின்சார ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஒகாயா, இலங்கையின் தலைநகர் கொழும்புவில் தனது முதல் காட்சியகத்தை திறந்துள்ளது.

இலங்கையின் டக்ளஸ் அண்ட் சன்ஸ் நிறுவனத்துடன் இனைந்து முதல் காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. முழுவதும் மின்சாரத்தில் இயங்க‌க்கூடிய வகையில் தயாரிக்கப்பட்ட, மித வேகத்தில் செல்லக்கூடிய பிரீடம், கிளாஸ் ஐ-கியூ, மற்றும் ஏவியன் ஐ-கியூ ஆகிய மூன்று வகை இ-ஸ்கூட்டர்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்த அறிமுக விழாவில், ஒகாயா மற்றும் டக்ளஸ் அண்ட் சன்ஸ் நிறுவனங்களின் தலைவர்கள், இலங்கைக்கான இந்திய தூத‌ர் கோபால் பாக்ளே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here