ஜோகூர் வனச் சூழல் பூங்காக்கள், நடைபயணம், வன இருப்புக்களில் 4WD பயணம் ஆகியவற்றிக்கு தடை

ஜோகூர் நிரந்தர வனப் பகுதிகளில் உள்ள அனைத்து வன சூழல் பூங்காக்கள் மற்றும் நடைபயணம் மற்றும் நான்கு சக்கர இயக்கி (4WD) வாகனங்கள் செல்ல இன்று முதல் மறுஅறிவிப்பு  தேதி வரை பொதுமக்களின் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாநில வனத்துறையின் (JPNJ) இயக்குனர் டத்தோ சலீம் அமான்,  அவர்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மூலம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அறிவிப்பின்படி, மழைக்காலத்தில் அசம்பாவிதம் அல்லது விபத்து ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. உத்தரவை மீறினால் தேசிய வனவியல் சட்டம் (Adoption) 1985ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அது கூறியது.

JPNJ இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள வன சூழல் பூங்காக்கள் Gunung Arong, Mersing; Gunung Belumut, Kluang; Panti, Kota Tinggi; Gunung Pulai, Pontian; Gunung Pulai II, Pontian; Soga Perdana, Batu Pahat; Sungai Bantang, Segamat and Taka Telor, Segamat ஆகியவையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here