துபாயில் வேலை எனக்கூறி மோசடி

துபாயில் வேலை வாங்கி தருவதாக் கூறி மோசடி செய்த கும்பலிடமிருந்து மீட்கப்பட்ட எட்டு மலேசியர்களில் ஏழு சரவாகியர்களும் அடங்குவர் என்று இரண்டாம் துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோப் கூறினார்.

மாதம் 1,000 அமெரிக்க டாலர் (RM4,480)  சம்பளத்துடன் ஒரு கண்ணியமான வேலை வாங்கித் தருவதாக் கூறியதாகவும், ஆனால் அங்குள்ள ஆன்லைன் சூதாட்ட நிறுவனத்தில் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறினர்.

அவர்கள் chat message  மூலம் இந்த வாய்ப்பை பெற்றதாகவும் அதில் அவர்கள் செய்யும் வேலையின் தன்மையைக் குறிப்பிடவில்லை என்றும் தெரியவந்துள்ளது. நவம்பர் 30 அன்று உள்ளூர் காவல்துறையினரிடம் உதவி கேட்டு தப்பிக்க முடிந்தது என்றும் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்கள்.

23 முதல் 24 வயதுக்குட்பட்ட ஏழு சரவாகியர்களுக்கும், கிளந்தானில் இருந்து பாதிக்கப்பட்ட மற்றொருவரும் நாடு திரும்புவதற்கான விமான டிக்கெட்டு செலவுகளை  சரவாக் தன்னார்வலர்கள் (சரவாக்கிய மாணவர்களை இணைக்கும் ஒரு NGO) செய்ததாக ஃபடில்லா கூறினார்.

எந்தவொரு வேலை வாய்ப்பையும் ஏற்றுக்கொள்வதற்கு  முன் கவனமாக  இருக்குமாறு அனைத்து மலேசியர்களையும் ஃபடில்லா வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here