தும்பாட்டில் கடந்த 31 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம்

கிளந்தானில் உள்ள தும்பாட் மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையானது 31 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு மோசமானதாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Kampung Menjual இல் வசிப்பவர், 31 வயதான Nur Fatihah Abdul Rahim, கடந்த இரண்டு நாட்களாக பெய்த தொடர் கனமழையால் தனது வீட்டில் ஒரு மீட்டருக்கும் அதிகமான வெள்ளம் ஏற்பட்டது என்றார். இந்த கிராமத்தில் கடைசியாக 2014 இல் ஒரு பெரிய அளவிலான வெள்ளம் ஏற்பட்டது. அது ‘மஞ்சள் வெள்ளம்’ ஆகும். ஆனால் அப்போது தாழ்வான பகுதிகளில் இருந்தஒரு சில வீடுகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. எனது குடும்பத்தினர் உடனடியாக  SK Kubang படாங்கில் உள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெயர்ந்தனர்.

இதற்கிடையில், Kampung Berangan Hujung வசிக்கும் Nor Azuralizma Ibrahim கூறுகையில் குறுகிய காலத்தில் தண்ணீர் இவ்வளவு விரைவாக உயரும் என்று எதிர்பார்க்காததால் அதிர்ச்சியடைந்ததாக கூறினார்.

நேற்று இரவு 11 மணியளவில், தனது வீட்டு வளாகத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடத் தொடங்கியதை கண்டதாகத் தெரிவித்தார். பின்னர் ஒரு கிலோமீட்டர் தூரம் அலைந்து தற்காலிக நிவாரண மையத்திற்கு குழந்தைகளுடன் சென்றதாக கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here