புத்ரா ஜெயா:
நாட்டின் டிஜிட்டல் உருமாற்ற அணுகுமுறைக்கு ஏற்ப, முதன்மை தரவுத் தளம் (PADU) அமைப்பை இன்று அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
புத்ராஜெயாவில் உள்ள அனைத்துலக மாநாட்டு மையத்தில் (PICC) நடந்த இந்த வெளியீட்டு நிகழ்வில், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த PADU முதன்மை தரவு தளத்தை அதிகாரப்பூர்வமாக இன்று தொடக்கி வைத்தார்.
PADU மூலம், அரசு உதவி மற்றும் மானியங்கள் விநியோகத்தில் ஏற்படும் தடங்கல்கள் மற்றும் கசிவுகள் என்பவற்றை தவிர்க்க முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்தார்.
PADU முதன்மை தரவு தளத்தில் மக்கள் தொகை , அரசு மானியங்கள், கல்வி, சுகாதாரம், தனிநபர் வருமானம் என அனைத்துவிதமான தரவுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார் .
இந்த அறிமுகவிழாவில் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி, டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் பயனர்கள் PADU தரவுத்தளத்திலுள்ள தங்களின் சுயவிவரங்கள் மற்றும் தரவுகளை மார்ச் மாதம் 31ஆம் தேதிவரை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று பொருளாதார அமைச்ச்யன் தலைமைச் செயலாளர் டத்தோ நோர் அஸ்மி டிரோன் கூறினார்.




















