இத்தாலிய பத்திரிக்கையில் பிரதமர் அன்வார் பற்றிய செய்தியா? பொய் உரைக்காதீர்

நேற்று திவான் ராக்யாட்டில் அதிகம் அறியப்படாத இத்தாலிய இணையதளமான ஏஜென்சியா நோவாவின் (Agenzia Nova)    அறிக்கையின் தலைப்பை மேற்கோள் காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீனுக்கு (Hamzah Zainudin) தொடர்பு மற்றும் டிஜிட்டல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

லெம்பா பாந்தாய்  நாடாளுமன்ற உறுப்பினர்,   இந்த இணையதளம் இத்தாலியில் உள்ள ராய்ட்டர்ஸ் (Reuters list)   செய்தி நிறுவனங்களின் பட்டியலில் கூட இல்லாததால்   இணையதள  அறிக்கைக்கு நம்பகத்தன்மை உள்ளதா?” என்று முகநூல் பதிவில்  கேள்வி எழுப்பியுள்ளார்.  அவர்கள் தங்கள் கட்டுரைகளை எழுதும் நிருபர்களின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை என்றும்  ஹம்சா மக்களை ஏமாற்ற முயற்சிக்கக்கூடாது என்றும் அவர் கூறினார்.

அன்வார் இப்ராஹிமை  இஸ்லாமிய நாட்டின்  முதல்  ஓரினச்சேர்க்கையாள  பிரதமர் என்று குறிப்பிடும் Agenzia Nova அறிக்கையை ஹம்சா மேற்கோள் காட்டியதை அடுத்து, நேற்று, திவான் ராக்யாட்டில் கூச்சல்  வெடித்தது.   பக்காத்தான் ஹராப்பான் (PH) நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஹம்சா அவரது அறிக்கையை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தினர். ஹம்சா அவர்களை  நிராகரித்து, Agenzia Nova க்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பீர்களா என்று அன்வாரிடம் கேட்க விரும்புவதாகக்  கூறினார்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யும் PH இன் தேர்தல் உறுதிமொழிக்கு எதிராக இருப்பதாக ஹம்சா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here