கூட்டரசு பிரதேச பெஜுவாங் கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகினார் கைருடின்

பெஜுவாங் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீரின் தலைமையின் மீதான நம்பிக்கையை இழந்ததைக் காரணம் காட்டி, உடனடியாக அமலுக்கு வரும் வகையில், கூட்டரசு பிரதேச பெஜுவாங் தலைவர் பதவியிலிருந்தும், கட்சியின் நிர்வாகக் குழுவிலிருந்தும் விலகுவதாக டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹாசன் தெரிவித்துள்ளார்.

பெஜுவாங் கட்சித் தலைவர் பதவியில் இருந்து துன் டாக்டர் மகாதீர் முகமட் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, தான் பதவி விலக முடிவு செய்ததாக கைருடின் கூறினார்.

“டாக்டர் மகாதீருக்கு எனது சிறந்த மற்றும் மிகவும் நம்பகமான சேவையை மட்டுமே நான் வழங்கினேன். அவரது ராஜினாமாவை பெஜுவாங் அரசியல் பணியகம் ஏற்றுக்கொண்டதாக, டிசம்பர் 15, 2022 அன்று மத்திய MEP கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதும், பெஜுவாங்கில் எனது சேவையைத் தொடர்வது பொருத்தமற்றதாகிவிட்டது, ”என்று அவர் மேலும் கூறினார்.

பெஜுவாங் கட்சி, அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடும் நோக்கத்துடன், 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி டாக்டர் மகாதீரால் தோற்றுவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here