பத்தாங் காலி நிலச்சரிவு தொடர்பில் 53 பேரிடம் போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்

பத்தாங் காலி       பகுதியில்  உள்ள ஆர்கானிக் பண்ணை முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான விசாரணையில் 53 நபர்களிடம் போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.  சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் Arjunaidi Mohamed  கூறுகையில், முகாம் நடத்துனர்  அவரது ஊழியர்கள் இருவர்,  உயிர்பிழைத்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்தும் போலீஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.  விசாரணைக்கு   மேலும் சில நபர்கள் அழைக்கப்படுவார்கள் என்று     தெரியவந்துள்ளது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 304 (A) மற்றும் பிரிவு 290 மற்றும் உள்ளாட்சி சட்டம் 1976 இன் பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுவதாக Arjunaidi Mohamed கூறினார்.  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இத்துயர சம்பவம்  தொடர்பான தகவல்களை அனுப்புவதற்காக     சிறப்பு குழு   ஒன்றை   காவல்துறையினர்    சுங்கை பூலோ  மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.

சனிக்கிழமையன்று  உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறைத் தலைவர் Suffian Abdullah முகாம் நடத்துனரையும் அவரது இரண்டு ஊழியர்களையும் விசாரணைக்கு   அழைத்ததாகக்  கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை அதிகாலை 2.42 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில்,  Jalan Genting-Batang Kali  யில் அமைந்துள்ள முகாம் தளத்தில் கிட்டத்தட்ட 300 மீட்டர் நீளமும் 70 மீட்டர் உயரமும் கொண்ட பகுதியில்   நிலச்சரிவு ஏற்பட்டது.  நிலச்சரிவில் இதுவரை 24 பேர் பலியாகியுள்ளனர்,  இன்னும்   ஒன்பது பேர்  காணாமல் போயுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here