மக்களுக்கான நேரடி அரசு நிதி உதவி (BTR) அடுத்த ஆண்டு ஜனவரியில் விநியோகிக்கப்படும் – பிரதமர்

முந்தைய அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட நேரடி அரசு நிதி உதவி திட்டமான Bantuan Tunai Rakyat (BTR) அடுத்த மாதம் விநியோகிக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இன்று மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதமரின் மினி வரவுசெலவுத் திட்டத்தின் அடிப்படையில், RM2 பில்லியன் ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் பயனாளிகள் இந்த நேரடி அரசு நிதி உதவி மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

மேலும், ஒவ்வொரு குடும்பமும் RM300 பெறுவார்கள், அதே நேரத்தில் திருமணமாகாதவர்கள் RM100 பெறுவார்கள் என்றும் கூறினார்.

இந்த திட்டத்தின் முதல் கட்டம் அடுத்த ஆண்டு அதாவது ஜனவரி 2023 தொடக்கத்தில் விநியோகிக்கப்படும் என்றும் இதன் மூலம், அதிகரித்து வரும் வாழ்க்கை செலவீனத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நிதிச்சுமையை சிறிதளவு குறைக்க முடியும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here