ECRL செலவுகள் 2016 உடன் ஒப்பிடும்போது RM11பில்லியன் குறைந்துள்ளது என்கிறார் பிரதமர்

கிழக்கு கடற்கரை ரயில் இணைப்பு (ECRL) திட்டத்திற்கான செலவு 2016 ஆம் ஆண்டின் அசல் செலவான RM85.97 பில்லியன் உடன் ஒப்பிடும்போது RM11 பில்லியன் குறைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறுயுள்ளார். 2021 ஆம் ஆண்டில், அப்போதைய போக்குவரத்து  அமைச்சர் Wee Ka Siong  சீரமைக்கும் திட்டத்திற்கு RM50.27 பில்லியன் செலவாகும் என்றார்.

ஒரு செய்தியாளர் கூட்டத்தில், திட்டத்தின் மறுசீரமைப்பிற்கு அதிக நிதி தேவைப்படுவதால் செலவு “சிறிது கூடுதலாக” இருக்கும் என்று அன்வார் கூறியிருந்தார்.  இருப்பினும், திட்டத்தின் புதிய செலவு 2016 இல் அறிவிக்கப்பட்ட அசல் எண்ணிக்கையை விட இன்னும் குறைவாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தைத் தொடர வேண்டும் என்பது எங்கள் முடிவு. ஆனால் எந்த மாற்றமும் செய்யாமல் திட்டத்தை செயல்படுத்துவது  ஏற்கனவே உள்ள பணிகளை சிக்கலாக்கும். பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்தவும், மொத்த செலவுகளைக் குறைக்கவும் உதவிய போக்குவரத்து, நிதி மற்றும் பணிகள் அமைச்சகங்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here