நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களை தேடும் பணி தொடர்கிறது

பத்தாங் காலி பகுதியில் உள்ள  ஆர்கானிக் பண்ணையில் ஏற்பட்ட  நிலச்சரிவு சம்பவத்தில் பலியான மற்றொருவரைத் தேடும் பணி இன்று  எட்டாவது நாளாக தொடர்கிறது.   காவல்துறை உட்பட பல்வேறு நிறுவனங்களின்  கண்டறிதல் பிரிவு நாய்களின் (K9)  உதவியுடன்     பலியான சிறுவனைத் தேடும் பணி காலை 8 மணியளவில்  தொடங்கியது.

நேற்றைய மழையுடன் ஒப்பிடும்போது இன்று காலை தேடுதல் இடத்தில் வானிலை சீராக இருந்தது.   கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 2.42 மணியளவில் நடந்த இந்த நிலச்சரிவு சோகத்தில் இதுவரை 61 பேர் உயிர் பிழைத்துள்ளனர், 30 உயிர்கள் பலியாகியுள்ளன.  நேற்று, ஏழாவது நாளாக தொடர்ந்த  இந்த நடவடிக்கையின் மூலம் முற்பகல் 11.04 மணியளவில் C (Riverside) பிரிவில், ஏழு மீட்டர் ஆழத்தில்  ஏற்கனவே சிதைந்த நிலையில்  ஒரு ஆண், ஒரு  பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் என  நான்கு பேரை  கண்டுபிடிக்க முடிந்தது.

சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து பலியானவர்களின்  உண்மையான எண்ணிக்கையை உறுதிப்படுத்தியது. குடும்ப உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் பல முறை கணக்கீடுகள் மற்றும் திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னர் சமீபத்திய தொகை பெறப்பட்டது     என  செய்தியாளர் சந்திப்பில் காவல்துறை தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here