இன்று காலை ஜாலான் சுங்கை மாணிக்கில், 21 பயணிகளுடன் சென்ற விரைவு பேருந்து மின்கம்பத்தில் மோதியதன் விளைவாக கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் காயமடைந்ததாக தெலுக் இந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர், முகமட் இஸ்மாயில் முகமட் யூனுஸ் தெரிவித்தார்.
சம்பவம் நடந்தபோது, பேருந்து ஜெர்டே, திரெங்கானுவில் இருந்து தஞ்சோங் மாலிம் நோக்கி சென்று கொண்டிருந்தது என்றும், சம்பவம் தொடர்பில் அவருக்கு அதிகாலை 5.24 மணிக்கு தீயணைப்புத் துறைக்கு அவசர அழைப்பு வந்தது என்றும் முகமட் இஸ்மாயில் கூறினார்.
” தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ஒரு விரைவு பேருந்து சாலை ஓரத்தில் உள்ள மின்கம்பத்தில் மோதியதால் விபத்துக்குள்ளானதைக் காணமுடிந்தது, பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
காயமடைந்த ஓட்டுநருக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டதுடன, காலை 7.48 மணிக்கு மீட்பு நடவடிக்கை முடிந்தது என்று அவர் கூறினார்.