சிலாங்கூரில் நீர் விநியோகம் இரவு 8 மணிக்குள் முற்றாக சீரடையும்- ஆயிர் சிலாங்கூர்

உலு சிலாங்கூர், ஜாலான் புக்கிட் பெருந்தோங்கில், குழாய் உடைந்த சம்பவத்தில் ஏற்பட்ட நீர் விநியோகிப்பு தடையை சீரமைக்கும் பணிகள் முடிவடையும் கட்டத்தை அடைந்துள்ளதாக ஆயிர் சிலாங்கூர் நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.

நண்பகல் 12 மணி நிலவரப்படி, நீர் விநியோகம் தடைப்பட்ட 91 விழுக்காட்டுப் பகுதிகளுக்கு, மீண்டும் நீர் விநியோகம் இயல்புநிலைக்கு திரும்பி விட்டிருந்தன.

நீர் விநியோகம் மீண்டும் சீராவதற்கான கால அவகாசம், ஒவ்வொரு இடத்திலுமுள்ள, பயனீட்டாளர்களின் இடம் மற்றும் தூரத்தைப் பொறுத்து வேறுபட்டிருக்கும் என்று ஆயிர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

மேலும் நீர் விநியோகம் இன்று இரவு 8 மணிக்குள் முற்றாக சீரடையும் என்றும் அது தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here