பத்தாங் காலி நிலச்சரிவில் காணாமல் போனதாக கூறப்படும் 31-வது நபரின் சடலம், இன்று பிற்பகல் கண்டெடுக்கப்பட்டது என்று, உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை தலைவர், சுஃபியான் அப்துல்லா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளதை அவர் உறுதிபடுத்தினார்.
கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பர் 16) அதிகாலை 2.42 மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட மொத்தம் 92 பேரில், 61 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.