ஜோகூரில் வெள்ளம் முற்றிலும் வற்றியுள்ளது, இதனால் சிகாமட்டில் இயங்கிவந்த கடைசி தற்காலிக நிவாரண மையம் நேற்று மாலை மூடப்பட்டது என்று, மாநில பேரிடர் மேலாண்மை குழு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவரும் கம்போங் செபெராங் பத்து படாக் மற்றும் கம்போங் பத்து 5 ஆகிய இடங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்பினர்.
இதற்கிடையில், நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் திணைக்களத்தின் தரவுகள் அடிப்படையில், அங்குள்ள நான்கு ஆறுகள் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளன, அதாவது சுங்கை மூவார் (பூலோ கசாப்), 8.25 மீட்டர் உயரம்; சுங்கை மூவார் (கம்போங் அவாட்), 19.33 மீ; சுங்கை செம்ப்ராங் (செம்ப்ராங் அணை), 10.05 மீ மற்றும் சுங்கை ஆயிர் ஈத்தாம் (கம்பபோங் பாயா எம்பன்), 4.77 மீ ஆகிய அளவிலும் உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.