இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கோழி முட்டைகள் சந்தையில் கிடைப்பது கடினம் -வியாபாரிகள் விசனம்

நாட்டில் நிலவும் கோழி முட்டை பற்றாக்குறையை போக்க, இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு கொண்டு வரப்படுதாக கூறப்படுகின்ற போதிலும், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி முட்டைகளை, இதுவரை, நான் பார்த்ததில்லை,” என, கம்போங் பாருவைச் சேர்ந்த வியாபாரி ரிசல் ஹுசின், 50 என்பவர் கூறினார்.

“இந்தியாவில் இருந்து கோழி முட்டைகளை இறக்குமதி செய்யப்படுவதாக தான் கேள்வியுற்றதாகவும், ஆனால் சில்லறை விற்பனைக் கடைகளிலோ அல்லது முட்டை மொத்த விற்பனையாளர்களிடமோ தான் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளைக் காணவில்லை” என்றார்.

மற்றுமொரு சுய தொழில் புரிபவரான 33 வயதான நஷ்ரா சுல்கூலிட் கூறுகையில், “அரசு முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்கிறது, ஆனால் அம்முட்டைகள் எங்கு விற்கப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை, ஏனென்றால் நான் அவற்றைப் பார்த்ததில்லை’ என்று கூறினார்.

இவை இவ்வாறு இருக்க, அடுத்தாண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் இந்த முட்டைத் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here