சிலாங்கூரின் 55% பகுதிகளில் தண்ணீர் விநியோகம் சீரடைந்தது

Jenderam     நீர் சுத்திகரிப்பு   நிலையத்தில்  ஏற்பட்ட  மாசு மற்றும்                துர்நாற்றத்தைத் தொடர்ந்து    நீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்த  பகுதிகளில் சீரமைப்பு  மற்றும்  விநியோக  பணிகள்  இன்று காலை 6 மணி நிலவரப்படி 55%  நிறைவடைந்துள்ளது.   தண்ணீர் விநியோகத்தைப் பெற்ற நுகர்வோர், திட்டமிட்டபடி மீட்பு செயல்முறை சீராக நடைபெறுவதை உறுதிசெய்ய, தண்ணீரைப் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்  என்று ஆயர்  சிலாங்கூர் வேண்டுகோள்விடுத்துள்ளது.

சனிக்கிழமையன்று, சிலாங்கூரில் உள்ள 472 பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைபட்டது, ஏனெனில் Jenderam  நீர் சுத்திகரிப்பு  நிலையத்தின்  அருகே 20 டன் எடையுள்ள கன்டெய்னர் லோரி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து   மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசியது.  Negeri Sembilan- Bandar Serenia, அருகே வடக்கு-தெற்கு விரைவுச்சாலை மத்திய இணைப்பின் (எலைட்) வடக்கு நோக்கிய  சாலையில்  Km44.1 இல் விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த இடம் Sungai Semenyih  சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 6.4 கிமீ தொலைவிலும், புக்கிட் Bukit Tampoi ஆலையிலிருந்து 18 கிமீ தொலைவிலும் இருந்தது. அதனால் தற்காலிகமாக  நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட வேண்டியிருந்தது. இதனைத் தொடர்ந்து  பெட்டாலிங் மாவட்டம் (172), உலு லங்காட் (54), செபாங் (196), கோல லங்காட் (27), புத்ராஜெயா (23)   ஆகிய   பகுதிகள்  பாதிக்கப்பட்டன

Sungai Semenyih மற்றும் Bukit Tampoi ஆகிய இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நேற்று மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.  பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்தும் இன்று பிற்பகல் 2 மணிக்குள் முழு விநியோகத்தைப் பெறும் என எதிர்பார்ப்பதாக ஆயர் சிலாங்கூர் தெரிவித்துள்ளது. .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here