பாங்காக்கில் உள்ள மலேசிய தூதரக அதிகாரி காலமானார்

பாங்காக்:

பாங்காக்கில் உள்ள மலேசியத் தூதரகத்தில் பொருளாதார துறைக்கான அமைச்சர்-ஆலோசகர் ஃபட்ஸிலா அபு ஹசன், கடந்த ஜனவரி 1 ஆம் தேதி பாங்காக்கில் காலமானார்.

46 வயதான ஃபட்ஸிலா, உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை காலை 6 மணியளவில் பாங்காக்கில் உள்ள அவரது காண்டோமினியத்தில் தூக்கத்தில் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது.

அவர் டிசம்பர் 2022 இல் பாங்காக்கில் உள்ள மலேசிய தூதரகத்திற்கு பணி நிமிர்த்தம் அனுப்பப்பட்டார்.

அவரது மைய்யத்தை மலேசியாவிற்கு திருப்பி அனுப்பப்படுவதற்கான ஏற்பாடுகளை தூதரகம் தற்போது செய்து வருகிறது. அவரது மைய்யத்து மாலை 5:30 மணிக்கு மலேசியா வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மறைந்த ஃபட்ஸிலா தனது சிரிப்பு மற்றும் கருணையான குணம் மூலம் பணியிடத்திற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியவர் என்று தாய்லாந்திற்கான மலேசிய தூதர் டத்தோ ஜோஜி சாமுவேல் தந்து இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

“சக ஊழியரான ஃபட்ஸிலாவை இழப்பது, தூதரகத்தில் உள்ள நம் அனைவருக்கும் ஒரு ஆழமான இழப்பாகும், இது எங்கள் தொழில்முறை மற்றும் தனிப்பட்ட துறைகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அவருடைய துடிப்பான குணம் மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எங்கள் அனைவரது மனதிலும் நீங்காது இருக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here