தீயில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லம் – பராமரிப்பாளர் காயம்

ஜோகூர் பாரு, Rumah Persatuan Orang Cacat   ஜலான் அஹாட், கம்போங் உங்கு மொஹ்சின் கட்டிடத்தில் இன்று காலை தீப்பிடித்ததில் மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லத்தின் பராமரிப்பாளரின் உடலில் தீக்காயம் ஏற்பட்டது.

காலை 7.53 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 64 வயதுடைய நபரின் உடலில் 30% தீக்காயங்கள் ஏற்பட்டதாக லார்கின் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய துணைத் தலைவர் மூத்த உதவி தீயணைப்பு கண்காணிப்பாளர் முகமது ஃபைஸ் சுலைமான் தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டபோது கட்டிடத்தில் 60 மற்றும் 70 வயதுடைய பார்வையற்ற நான்கு முதியவர்கள் இருந்ததாகவும், அவர்களை வழிப்போக்கர்களால் மீட்டு சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். கட்டிடத்திற்கு 65% சேதத்தை ஏற்படுத்திய தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here