சபா, சரவாக்கில் வெள்ளத்தை சமாளிக்க மலேசிய இராணுவம் தயாராக உள்ளது

தற்போது தொடங்கி அடுத்த மார்ச் மாதம் வரை உள்ள ருவமழைக் காலத்தில் சரவாக்கில் வெள்ளம் ஏற்பட்டால், அவற்றை சமாளித்து, உடனடி நடவடிக்கையில் ஈடுபடும் நோக்கில் மலேசிய இராணுவத்தின் 23 அதிகாரிகள் மற்றும் இதர நிலைகளைச் சேர்ந்த உறுப்பினர்களையும் (LLP) நியமித்துள்ளது.

அதேபோல சபாவில் மொத்தம் 19 அதிகாரிகள் மற்றும் 163 எல்எல்பி உறுப்பினர்களுக்கு இதே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் டான்ஸ்ரீ ஜாம்ரோஸ் முகமட் ஜைன் தெரிவித்தார்.

இந்த முறைமை கிளாந்தான், திரெங்கானு மற்றும் பகாங் ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டபோது, ​​மலேசிய இராணுவத்தின் உடனடி நடவடிக்கையில் ஈடுபடும் உறுப்பினர்களின் செயற்பாடு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று அவர் கூறினார்.

வெள்ளத்திற்கான தயார்நிலையை மேலும் அதிகரிக்க, சரவாக்கில் 22 அதிகாரிகள் மற்றும் 874 LLP உறுப்பினர்களை இராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளது. அதேபோல் சபாவில், மொத்தம் 21 அதிகாரிகள் மற்றும் 654 LLP உறுப்பினர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று ஜாம்ரோஸ் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here