கடந்த ஞாயிற்றுக்கிழமை, இங்குள்ள கம்போங் புக்கிட் ஜாங்கில் சாலையோரத்தில் கிடந்த சந்தெகத்திற்கிடமான பொட்டலத்தில் கஞ்சா வகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதன் மதிப்பு RM257,075 என்றும் மதிப்பிடப்பட்டதாகவும் திரெங்கானு மாநில காவல்துறைத் தலைவர், டத்தோ ரோஹைமி முகமட் இசா கூறினார்.
“கோலா திரெங்கானுவுக்கு செல்லும் திசையில் இருந்து கெமுரு டோல் பிளாசாவின் நுழைவாயிலில் ரோந்து சென்ற போக்குவரத்து அதிகாரிகள் குழு, சாலைத் தடுப்பிற்கு அருகிலுள்ள தரையில் சந்தேகத்திற்கிடமான நிலையில் ஐந்து கருப்பு பிளாஸ்டிக் பொட்டலங்களைக் கண்டது”.
ஐந்து கருப்பு பிளாஸ்டிக் பொட்டலங்களை ஆய்வு செய்ததில், கஞ்சா வகை போதைப்பொருளாக சந்தேகிக்கப்படும் 101 காய்ந்த செடிகளின் பதப்படுத்தப்பட்ட துண்டுகள் அடங்கிய 101 பொட்டகள் அடங்கிய பெட்டியின் உள்ளே இருந்தது,” என்று அவர் இன்று ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட மொத்த போதைப் பொருட்கள் 102.83 கிலோகிராம் எடையுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று ரோஹைமி கூறினார்.
“சம்பந்தப்பட்ட பாதையின் பகுதியில் கடமையில் இருந்த போக்குவரத்து காவல்துறையினரை கண்டதும், குறித்த போதைப்பொருட்களை குற்றவாளிகள் தற்காலிகமாக விட்டுச் சென்றதாக நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கு ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 39B இன் படி விசாரிக்கப்பட்டது என்றார்.









