மலாக்கா தேசிய பதிவுத் துறை வரும் ஜனவரி 1 முதல் பணமில்லா பரிவர்த்தனைகளை நடைமுறைப்படுத்துகிறது

மலாக்கா:

மலாக்கா தேசிய பதிவுத் துறை (NRD) எதிர்வரும் ஜனவரி 1, 2023 முதல் ஆயிர் கேரோ மற்றும் UTC கிளைக் கவுன்டர்களில் பணமில்லா பரிவர்த்தனைகளை முழுமையாகச் செயல்படுத்தும் என்று மலாக்கா தேசிய பதிவுத் துறையின், கார்ப்பரேட் தகவல் தொடர்பு பிரிவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த பணமில்லா பரிவர்த்தனைகள் அடையாள அட்டைப் பிரிவு, திருமணம்/விவாகரத்து மற்றும் குடியுரிமைப் பிரிவு மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு மற்றும் தத்தெடுப்புப் பிரிவு ஆகிய பிரிவுகளில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

“ஈ -பேமென்ட் என்பது அரசாங்க சேவைகளுக்கான மின்னணு கட்டண முறையாகும், இது இணைய வங்கி, மொபைல் கட்டணம், ஏஜென்சி போர்டல்கள், அரசாங்க கட்டண நுழைவாயில்கள் போன்ற பல சேனல்கள் வழியாக பணமில்லா (கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு) முறையில் இலக்கவியலில் செலுத்துவதைக் குறிக்கும்.

“இது மிகவும் வசதியான, பாதுகாப்பான, முறையான மற்றும் திறமையான கட்டண வசதிகளுக்கான சிறந்த ஒரு சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான சந்தேகம் உள்ளவர்கள் 06-2326881/06-2326600 என்ற எண்ணில் மலாக்கா தேசிய பதிவுத் துறையின் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் யூனிட்டைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது pppmelaka@jpn.gov.my க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here