கினபாடாங்கான் & லாமாக் இடைத்தேர்தல்: நாளை வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்!

கினபாடாங்கான்:

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின் அவர்களின் மறைவைத் தொடர்ந்து காலியான இடங்களுக்கான இடைத்தேர்தல் நடவடிக்கைகள் நாளை (ஜனவரி 10) முறைப்படி தொடங்குகின்றன.

நாளை காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை ஸ்ரீ லாமாக் மண்டபத்தில் (Sri Lamag Hall) வேட்புமனுத் தாக்கல் நடைபெறும்.

வரும் ஜனவரி 24, 2026.முன்கூட்டிய வாக்குப்பதிவு இடம்பெறும் என்றும், இந்த தொகுதியில் மொத்தம் 48,722 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.

மேலும் தேர்தலில் களமிறங்கும் முக்கிய வேட்பாளர்கள் வரிசையில், பாரிசான் நேஷனல் (BN)வாரிசான் (Warisan) கினபாடாங்கான் (நாடாளுமன்றம்) முகமட் நைம் குர்னியாவான் (புங் மொக்தாரின் மகன்), டத்தோ சடி அப்துல் ரஹ்மான்லாமாக் (சட்டமன்றம்)முகமட் இஸ்மாயில் ஆயோப் (மிஹா)மஸ்லிவதி அப்துல் மாலெக் ஆகியோரும், GRS மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) ஆகிய கூட்டணிகள் புங் மொக்தார் மீதான மரியாதையின் நிமித்தமாக இத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளன.

இந்நிலையில் தேர்தல் பணியில் சுமார் 926 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here