வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண் தொழில் முனைவோருக்கு அரசாங்கம் உதவ வேண்டும்: நோராயினி வலியுறுத்தல்

நாடு முழுவதும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பெண் தொழில்முனைவோருக்கு வட்டியில்லா கடன் திட்டத்தை ஒரு வருட கால அவகாசத்துடன் அறிமுகப்படுத்துமாறு வனிதா அம்னோ தலைவர் Noraini Ahmad அரசாங்கத்திற்கு கோரிக்கை   விடுத்துள்ளார்.

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு RM400 மில்லியன் ஒதுக்கியதில் புத்ராஜெயா எடுத்த விரைவான நடவடிக்கையை வரவேற்பதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறு மாத கடன் தடையை வழங்க முன்முயற்சி எடுத்த வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் Noraini கூறினார். இருப்பினும் பெண் தொழில்முனைவோருக்கு உதவ இன்னும் பல வசதிகளை செய்ய முடியும் என்றார்.

வனிதா அம்னோ, புத்ராஜெயா தொழில் முனைவோர்களுக்கு  குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண் தொழில்முனைவோருக்கு தீவிர கவனம் செலுத்த விரும்புகிறது என்று Noraini ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த தொழில்முனைவோர்களுக்கு மானிய வடிவில் அரசாங்கம் நிதியை ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் பரிந்துரைக்க விரும்புகிறோம்.

இதனால் அவர்கள் தங்கள் வணிகங்களை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.  அது தவிர, 12 மாத கால அவகாசத்துடன் வட்டியில்லா கடன் திட்டத்தையும் அரசாங்கம் அறிமுகப்படுத்த விரும்புகிறோம். புத்ராஜெயாவால் வாக்குறுதியளிக்கப்பட்ட உதவிகள் அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்வதற்காக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண் தொழில்முனைவோரின் பெயர்களை சேகரிக்கும் பணியை வனிதா அம்னோ செய்துள்ளதாக Noraini கூறினார்.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த கனமழையால் கிளந்தான், தெரெங்கானு, பேராக், சபா மற்றும் சரவாக் ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிளந்தான் மற்றும் தெரெங்கானு ஆகிய இரு பகுதிகளிலும் மட்டும் 55,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் பிரதமர் அன்வார் இப்ராஹிம் வெள்ளப் பகுதிகளை  தயார்படுத்தும் முயற்சிகளுக்காக தேசிய பேரிடர் மேலாண்மை முகமைக்கு (நட்மா) RM400 மில்லியன் அளிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். தேவைப்படும் போது கூடுதல் நிதி வழங்கப்படும் என உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here