கெப்பாலா பாத்தாஸ் – பெர்தாம் நீர் விளையாட்டுப் பூங்கா மூடப்பட்டதால் பார்வையாளர்கள் ஏமாற்றம்

கெப்பாலா பாத்தாஸ்:

கெப்பாலா பாத்தாசில் இயங்கிவரும் பெர்தாம் நீர் விளையாட்டு பூங்கா உள்ளூர் அதிகாரசபையின் (PBT) அனுமதி மற்றும் இயக்க உரிமம் இல்லாது இயங்கி வந்ததன் பேரில், நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இந்த மூடல் உத்தரவு செபெராங் பிறை நகராண்மைக் கழக (MBSP) அமலாக்க அதிகாரிகளால் வழங்கப்பட்டது.

குறித்த நீர் விளையாட்டு பூங்காவின் நுழைவாயிலில் ஒட்டப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் சட்டம் 1998 இன் படி, வளாகத்தில் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூடப்பட்டன. அத்தோடு அந்த வளாகம் உரிமம் இல்லாமல் பொழுதுபோக்கு (நீர் விளையாட்டு பூங்கா) நடத்தியதற்காகவும், நகராண்மைக் கழகத்தின் பொழுதுபோக்கு  சட்டத்தின் விதிமுறைகளை மீறியதற்காகவும், மூடப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் RM90 மில்லியன் மதிப்பில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நீர் விளையாட்டு பூங்கா, The Maritime Water Front Suites நிறுவனத்திற்கு சொந்தமான எட்டு ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு, கடந்த டிசம்பர் 16 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.

பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த நீர் விளையாட்டு பூங்கா, திடீரென மூடப்பட்டது பார்வையாளர்களுக்கு சற்று ஏமாற்றமளிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here