வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆவணங்களை மாற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் இல்லை- தேசிய பதிவுத் துறை

ஜெர்தேஹ்:

சமீபத்திய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளாந்தான் மற்றும் திரெங்கானு மாநில மக்களிடமிருந்து தனிப்பட்ட ஆவணங்களை மாற்றுவதற்கான 500 விண்ணப்பங்களை தேசிய பதிவுத் துறை (NRD) இதுவரை பெற்றுள்ளது என்று அதன் தலைமை இயக்குநர், டத்தோ ரஸ்லின் ஜூசோ தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் ஆவணங்களை மாற்றுவதற்கு ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் இல்லை என்பதால், அவர்கள் அவசர அவசரமாக மாற்ற வேண்டிய அவசியமில்லை என்று அவர் மேலும் கூறினார்.

“அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்கள் அல்லது இறப்புச் சான்றிதழ்கள் போன்ற தனிப்பட்ட ஆவணங்களை வெள்ளத்தில் இழந்தவர்கள் அல்லது சேதப்படுத்தியவர்கள் அவற்றை இலவசமாக மாற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம்,” என்று அவர், இன்று உலு பெசூட்டில் உள்ள கம்போங் லாவில் உள்ள நிவாரண மையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 19 பேருக்கு அடையாள அட்டைகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here