சிலாங்கூரிலுள்ள முகாமிடும் பகுதிகளின் செயல்பாட்டை நிறுத்துமாறு மாநில அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை

ஷா ஆலாம்:

சிலாங்கூரிலுள்ள முகாமிடும் பகுதிகளின் செயல்பாட்டை நிறுத்துமாறு அம்மாநில அரசாங்கம் இதுவரை எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்று அம்மாநில மந்திரி புசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

இது தொடர்பில் மாநில அரசாங்கம் பதற்றமாகவும் அவசரமாகவும் முடிவெடுக்க வேண்டியதில்லை. இருப்பினும், பத்தாங் காலி, Father’s Organic Farm முகாமிடல் பகுதியில், கடந்த டிசம்பர் 16ஆம் தேதி நடந்த நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து, சிலாங்கூரில் முகாமிடல் நடவடிக்கையை மேற்கொள்ளும் தரப்பினர் கடைப்பிடிப்பதற்கென தாம் சில வழிகாட்டிகளை வகுத்திருப்பதாக அவர் கூறினார் .

”நாங்கள் ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்போம். இதற்கு முன்னர், முகாமிடுவதற்கு எந்தவொரு உரிமமும் தேவையில்லை. இது தொடர்பில், ‘நாங்கள் முழுமையான நடவடிக்கை ஆராயவும் நடவடிக்கை எடுக்க வேண்டியுமுள்ளது. நாங்கள் பதற்றமுடன் அவசர அவசரமாக முடிவெடுக்க முடியாது. இது ஒவ்வோர் ஆண்டும் நிகழவில்லை. எப்போதாவது நடப்பதால்தான் எனக்கு அறிக்கை தேவைப்படுகிறது,” என்று அமிருடின் மேலும் கூறினார்.

நிலச்சரிவு சம்பவம் குறித்து கனிம மற்றும் புவி அறிவியல் துறையின் முழு அறிக்கைக்காக இன்னும் காத்திருப்பதாகக் கூறிய அவர், ஜேஎம்ஜி மற்றும் தீயணைப்புத் துறையின் ஆரம்ப அறிக்கைகள், உயரமான நிலத்தில் தொடங்கிய நிலத்தடி நீர் இயக்கத்தால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது” என்று ஷா ஆலாமில் நடந்த Gerak Gempur SPM 2022 திறன் மேம்பாட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here