கெம்பிங் முறையிலான சுற்றுலாவிற்கு மலேசியாவின் தேர்வுகள்

கெம்பிங் முறையில் சுற்றுலா செல்ல விரும்பும் பயணிகளுக்கு மலேசியாவில் சுவாரஸ்யமிக்க பல இடங்கள் உள்ளன. கெம்பிங் செல்ல முனையும் சுற்றுப்பயணிகளுக்கு மலேசியாவில் முதலில் நினைவுக்கு வரும் இடம் பகாங்கில் ஜெண்டபாயக் இடம்தான். ஆனால் அந்த இடத்தைத் தவிர்த்து இன்னும் பல இடங்கள் கெம்பிங் முறையிலான சுற்றுலாவுக்கு ஏற்ற இடங்களாக அமைந்துள்ளன. கெம்பிங் முறையில் சுற்றுலா செல்ல வேண்டும் என்றாலே நம் நினைவுக்கு வருவது சிறந்த வெளிப்புறப் பகுதிகள், ஆக்கப்பூர்வமான அனுபவங்கள்தான். மலேசியாவில் உள்ள இந்தப் பிரத்தியேக இடங்களையும் பாதுகாப்பான முறையில் நமக்கு வழங்குகின்றன.

Tiger Base Camp (TBC) @ Citrus Valley, Tg Sedili

தஞ்சோங் செடிலி பகுதி அருகே தனியாருக்குச் சொந்தமான கடற்கரையில் இந்த கெம்பிங் முறையிலான தங்குமிடம் அமைந்துள்ளது. இங்கு குளியல் அறை, கழிப்பறை மட்டுமல்லாது கூடாரங்கள் உள்ளிட்ட கெம்பிங் முறையிலான சுற்றுலாக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் கிடைக்கும். அதோடு இவை அனைத்தும் ஏற்புடைய விலையில் வழங்கப்படுகின்றன. இங்கு வரும் பயணிகள் தற்காலிகப் படுக்கை, போர்வை, சமையல் பொருட்களையும் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். தென் சீனக் கடல் பார்வையில் அமைந்துள்ள இந்தத் தங்குமிடம் குடும்பத்தினர் அனைவரும் ஙெ்ல்ல ஏற்புடையது. இங்கு நீச்சல், மீன்பிடித்தல் மட்டுமன்றி இன்னும் பல சுவாரஸ்யமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

Rainforest Camping Perhentian Island

திரெங்கானு பெர்ஹெந்தியான் கெச்சில் தீவின் மீரா கடற்கரைக்கு அருகே இந்தச் சிறிய சுற்றுலாத்தலம் அமைந்துள்ளது. இது மலைக்காடு சுற்றுலாத்தலமாகவும் பயணிகளால் அழைக்கப்படுகிறது. பெசுட் படகுத்துறையில் இருந்து 30 நிமிடங்கள் பெர்ரி பயணம் மேற்கொண்டு இந்த இடத்திற்கு வந்து விடலாம். இது தனியாருக்குச் சொந்தமான கடற்கரை என்பதால் அங்கு வரும் சுற்றுப்பயணிகள் எந்த ஒறு இடையூறும் இன்றி தங்கள் விடுமுறையைக் கழிக்கலாம். இங்குள்ள பார், உணவகத்தில் சுற்றுப்பயணிகள் தங்கள் பொழுதைக் கழிப்பதோடு ருசியான உணவு, பானங்களையும் சுவைக்கலாம். இங்கு கழிப்பறை, குளியல் அறை, கூடார வசதிகள் உள்ளன. அது மட்டுமல்லாது பயணிகள்  சூரிய அஸ்தமனம் உள்ளிட்ட அனுபவங்களையும் இங்கு பெறலாம்.

Payung Gateway, Cherating

கோலாலம்பூரில் இருந்து 3 மணி நேர பயணத் தூரத்தில் இந்தத் தங்குமிடம் அமைந்துள்ளது. பகாங் செரான்திங் பகுதியில் அமைந்துள்ள இந்தத் தங்குமிடக் கூடாரம் அமைப்பது மட்டுமன்றி தங்குமிட வேன் நிறுத்த வங்திகளையும் கொண்டுள்ளது. தென் சீனக் கடல் பார்வையில் அமைந்துள்ள கடற்கரையில் இருக்கும் தங்குமிடம் இங்கு வரும் சுற்றுப்பயணிகளுக்கு நல்ல பயனைத் தரும் என்றால் அது மிகையாகாது. இங்கு வரும் சுற்றுப்பயணிகளுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இங்கு உள்ளன. மேலும் கெப்பிங் முறையில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஒருங்கிணைந்த சமையல் அறை வசதியும் இங்கு உள்ளது. இது தவிர அவர்கள் அருகில் உள்ள உணவகங்களிலும் உணவு உட்கொள்ளலாம். இது மட்டுமல்லாது காயா படகு, மீன்பிடி போன்ற அனுபவங்களும் அவர்களுக்கு இங்கு கிடைக்கின்றன. இயற்கை ஒலியைக் கேட்கும் வாய்ப்பும் சுற்றுப்பயணிகளுக்கு இந்தத் தங்குமிடத்தில் கிடைப்பது கூடுதல் சிறப்பு.

Takah Pengkoi, Bekok

ஜோகூர் பெக்கோ, தாக்கா பெங்கோயில் அமைந்துள்ள இந்தத் தங்குமிடம் மிகவும் எதார்த்தமான இயற்கைச் சுழலை  கூடாரம் அமைத்து தங்க வரும் சுற்றுப்பயணிகளுக்கு ஏற்படுத்தித் தருகிறது. காரணம் இந்தத் தங்குமிடம் அருகில் அழகிய நீர்வீழ்ச்சி, கற்பாறைகள் அமைந்துள்ளன. மேலும் இங்கு வரும் சுற்றுப்பயணிகளின் வசதிகளை அதிகப்படுத்தும் வகையில் 35 அடி உயரம் உள்ள மர வீடுகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர மின்சார வசதி, வழிபாட்டு அறை, குளியல் அறை உள்ளிட்ட வசதிகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. கம்போங் குடோங் பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு வரும் பூர்வக்குடி மக்களின் கிராமங்களையும் செம்பனைப் பயிர்களைகளையும் சுற்றுப்பயணிகள் பார்க்க முடியும். இதன் மூலம் அவர்கள் தங்கள் அனுபவத்தைப் பெருக்கிக் கொள்ளலாம். இது மட்டுமல்லாது இந்த தங்குமிடத்தில் ஒரே நேரத்தில் 50 சுற்றுப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பு கருதி இந்த எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

* இப்படி கெம்பிங் முறையிலான சுற்று மேற்கொள்ள மலேசியா முழுவதும் பல சுவாரஸ்யமான இடங்கள் உள்ளன. சுற்றுப்பயணிகள் சுவாரஸ்யமான, ஆக்கப்பூர்வமான பயணங்களை மேற்கொள்ள இந்த தங்குமிடங்கள் வழி ஏற்படுத்தித் தருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here